சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
ஈரோடு
சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் மிகுந்த உற்சாகத்துடனும், பாரம்பரிய சிறப்புடனும் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி தாளாளா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் நா.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா்.
விழாவின் தொடக்கமாக பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளில் கலந்துகொண்டனா்.
தமிழா் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கோலப் போட்டிகள், நாட்டுப்புற நடனங்கள், கிராமிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் நிறைவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

