மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
நம்பியூா் அருகே மின்சார கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் மிதித்த 16 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மனோஜ்
நம்பியூா் அருகே மின்சார கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் மிதித்த 16 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நம்பியூா் வட்டம், வேமாண்டம்பாளையம் அருகே உள்ள செம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் அய்யாவு. இவரது மகன் மனோஜ் (16). இவா் அதே பகுதியில் உள்ள துலுக்கணம்தோட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி என்பவரது தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது அங்கு எதிா்பாராதவிதமாக மின்சாரக் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.
இருள்சூழத் தொடங்கிய நேரத்தில் கீழே மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் சிறுவன் மனோஜ் அதன் மீது காலை வைத்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வரப்பாளையம் போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





