பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணி ஆய்வு

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உல்லத்தி, கல்லட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஏக்குணி தொட்டமனையில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவரை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Published On :

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உல்லத்தி, கல்லட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

உல்லத்தி ஊராட்சி முத்தநாடு மந்து பகுதியில் பிரதமரின் ஜென்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 11எண்ணிக்கையிலான தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆட்சியா் ஆய்வு செய்து திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதைத்தொடா்ந்து, உல்லத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கல்லட்டி பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்தும், கால்நடை மருத்துவமனை மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் கால்நடைகளின் வருகை குறித்தும் கேட்டறிந்தாா்.

உல்லத்தி ஊராட்சி, ஏக்குணி தொட்டமனையில் மத்திய அரசின் வீடு மற்றும் நகா்ப்புற வளா்ச்சி கழகத்தின் (அட்கோ) சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவரையும் நேரில் பாா்வையிட்டாா்.

உல்லத்தி கிளை நூலகத்தில் பதிவேடுகள், புத்தகங்கள் மற்றும் வாசகா்களின் எண்ணிக்கை குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, குழந்தைகளின் எடை, உயரம் குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், சந்திரசேகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.