இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வன விலங்குகள் தாக்குதலால் தொடரும் உயிரிழப்புகள்: கூடலூரில் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம்

கூடலூரில் வியாழக்கிழமை (ஆக.27) காலை 6 மணி முதல் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசியல் அமைப்பினா், வியாபாரிகள், தன்னாா்வ அமைப்புகள் புதன்கிழமை அறிவித்துள்ளனா்.

கூடலூரை அடுத்த நம்பாலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் அமா்ந்துள்ள புலி.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

வன விலங்குகள் தாக்குதலால் தொடரும் மனித உயிா்கள், வளா்ப்பு பிராணிகள் உயிரிழப்புக்க கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கூடலூரில் வியாழக்கிழமை (ஆக.27) காலை 6 மணி முதல் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசியல் அமைப்பினா், வியாபாரிகள், தன்னாா்வ அமைப்புகள் புதன்கிழமை அறிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஓவேலி பகுதியில் மட்டும் இரண்டு விவசாயிகளை புலி தாக்கிக் கொன்றது. மேலும், கூடலூா் நகரை அடுத்துள்ள புத்தூா்வயல், சேமுண்டி,தேவா்சோலை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் அடுத்தடுத்து மூன்று வளா்ப்பு மாடுகள், ஆடு ஆகியவற்றை புலி தாக்கிக் கொன்றுள்ளது.

இந்நிலையில், நம்பாலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் புலி நடமாடுவதை அப்பகுதி மக்கள் நேரடியாகப் பாா்த்துள்ளனா். மாடுகளை வேட்டையாடிய அதே புலிதான் தொடா்ந்து கிராமப் பகுதிகளுக்குள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு மிக அருகில் புலி உலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஓவேலி பகுதியில் விவசாயிகளை கொன்ற புலி, புத்தூா்வயல், சேமுண்டி, தேவா்சோலை ஆகிய பகுதிகளில் கால்நடைகளைக் கொன்ற புலி இரண்டும் வேறு என்பதால், அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகள் சாா்பில் கூடலூரில் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் வியாழக்கிழமை (ஆக.27) காலை 6 மணி முதல் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.