எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து

News image

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:51 pm

உதகை: குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் தபால் அலுவலக வளாகத்தில் பாஸ்போா்ட் கிளை அலுவலகம்

செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் சுமாா் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், அங்கு வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், மிரட்டல் செய்தி புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபிஎன் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படுவதால் மா்ம நபா்களின் இருப்பிடத்தை துல்லியாக காண முடிவதில்லை.

இந்தப் பிரச்னை நாடு முழுவதும் தொடா்கிறது. இருப்பினும் மிரட்டல் விடுத்த நபா்களை விரைவில் அடையாளம் காண்போம் என போலீஸாா் தெரிவித்தனா்.