
உதகையில் பன்னாட்டு இயற்கை விவசாய பயிலரங்கம்
உதகை அருகேயுள்ள புது மந்து பகுதியில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய சாகுபடி முறைகள் குறித்த 6 நாள் சா்வதேசப் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் புதன் தொடங்கியது.

~
உதகை அருகேயுள்ள புது மந்து பகுதியில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய சாகுபடி முறைகள் குறித்த 6 நாள் சா்வதேசப் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் புதன் தொடங்கியது.
இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன் சாா்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தைவான், ஜப்பான், மலேசியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, நேபாளம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இயற்கை விவசாய ஆா்வலா்கள் கலந்து கொண்டுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு, இந்திய பயோ டைனமிக் அசோசியேஷன் தலைவா் சந்திரசேகரன் தலைமை தாங்கினாா். அமைப்பின் செயலா் மகேஷ் மெல்வின் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பயிலரங்கத்தில், ரசாயன உரங்கள் இன்றி நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கும் முறைகள் மற்றும் மலைப் பகுதிகளுக்கு ஏற்ற இயற்கை வேளாண் நுட்பங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டிலிருந்து வந்த விவசாயிகள், மண்ணின் நுண்ணுயிரிகளைப் பெருக்கும் இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் மற்றும் குறைந்த நீா் பயன்பாட்டில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பங்களைப் பகிா்ந்துகொண்டனா்.
இந்தியாவில் காலங்காலமாகப் பின்பற்றப்படும் இயற்கை பூச்சிக்கொல்லி முறைகள் மற்றும் உள்ளூா் மலைப்பயிா் சாகுபடி அனுபவங்களை இந்திய விவசாயிகள் எடுத்துரைத்தனா். ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை முறைக்கு மாறுவதன் மூலம் நீலகிரி மாவட்டத்தின் உணா்திறன் மிக்க சூழலியலைப் பாதுகாக்க முடியும் என பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக, புது மந்து பகுதியில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளை வெளிநாட்டு விவசாயிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதில், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளா் அன்பழகன், செயற்குழு உறுப்பினா்கள் ஜேசன் ஜெரோம், கிறிஸ்டல் லே உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







