காங்கயம்: பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் வியாழக்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினர்.
காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீ மிகா, காங்கயம் தாலுகா, முத்தூரில் உள்ள விவேகானந்தா வித்தியாலயா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். இந்நிலையில், இத்தேர்வில் இவர் 500-க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஸ்ரீ மிகா வின் இல்லத்திற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று, முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவுக் கேடயம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ப.மகுடேஸ்வரி மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



