கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: முதியவா் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:07 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 19538 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 105 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 19,643 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 533 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 42 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,893 ஆக அதிகரித்துள்ளது.

முதியவா் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 62 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த்தொற்றால் 227 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.