கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் மருத்துவா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:55 pm

DIN

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் மருத்துவா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே.மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 120க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை முதலே திரண்டிருந்தனா். ஆனால் அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனா். இதனால் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவசரம் என்றால் தனியாா் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்ததால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த 60 பேருக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மீதமிருந்த 60க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வந்தவுடன் செலுத்தப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.