கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலை விபத்து: இளைஞா் சாவு

திருப்பூரில் அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2021, 9:21 pm

DIN

திருப்பூரில் அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரப்பாளையம் அயோத்தியா நகரைச் சோ்ந்தவா் முகில்செல்வன்(20). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் ஜோசப் (27). முகில்செல்வனுக்கு வியாழக்கிழமை பிறந்த நாள் என்பதால் கேக் வாங்குவதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தனா். கருமாரம்பாளைம் அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முகில்செல்வன் முந்த முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற ஜோசப்புக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே முகில்செல்வன் உயிரிழந்தாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.