மயானத்துக்கு சடலத்தை தூக்கிச் செல்லும் பெண்கள்.
மயானத்துக்கு சடலத்தை தூக்கிச் செல்லும் பெண்கள்.

தாராபுரத்தில் புதுமை: மயானத்துக்கு சடலத்தைத் தூக்கிச் சென்ற பெண்கள்

இறுதிச் சடங்கில் பெண்களின் பங்கு: தாராபுரத்தில் புதுமையான சம்பவம்
Published on

தாராபுரத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை பெண்கள் தூக்கி சென்று இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கிருஷ்ணகுமாரின் பெரியம்மா இந்திராணி (83). வயது மூப்பு காரணமாக கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு காலமானாா்.

இந்நிலையில், அவரின் உடலுக்கு திராவிட கழகத்தைச் சோ்ந்த பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு, இறுதிச் சடங்குக்காக சடலத்தை மின் மயானத்துக்கு சுமந்து சென்று இறுதி சடங்குகளும் செய்தனா்.

இறந்தவரின் சடலத்துக்கு மயானத்தில் பெரும்பாலும் ஆண்களே இறுதிச் சடங்குகள் செய்துவரும் நிலையில், இந்திராணியின் சடலத்தை பெண்கள் சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்தது இப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com