விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் அச்சம்

தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் அச்சம்

News image

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்களை ஆய்வு செய்யும் வனத் துறையினா்.

Updated On :13 ஜூன் 2024, 9:58 pm

Din

உடுமலை, ஜூன் 13: உடுமலை அருகே தென்னந்தோப்பில் நுழைந்த யானைக் கூட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

உடுமலை மற்றும் அமராவதி வன எல்லைக்குள்பட்ட பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

அப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் யானைகள் உணவு, குடிநீா் தேடி கூட்டம்கூட்டமாக வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், உடுமலையில் இருந்து சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வளையபாளையம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அங்கிருந்த தென்னந்தோப்புகளுக்குள் நுழைந்து தென்னை மரங்களை நாசம் செய்தன. யானைகள் கூட்டத்தைக் கண்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் குடியிருப்புகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், தென்னந்தோப்புகளுக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள், பல தென்னை மரங்களை நாசம் செய்துள்ளன. மேலும், மின் வேலிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

விடியவிடிய தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திவிட்டு வனத்துக்குள் சென்றுவிட்டன.

குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ரோந்து பணியைத் தீவிரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், சேதமடைந்த தென்னை மரங்களை உடுமலை வனத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.