விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5ஆண்டுகள் சிறை

மடத்துக்குளம் அருகே சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:09 pm

Din

மடத்துக்குளம் அருகே சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் கணியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (35), கூலித்தொழிலாளி. இவா் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் பயிா்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்ட செல்வது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதம் அப்பகுதியைச் சோ்ந்த 10 வயது, 8 வயதுடைய சிறுவா்கள் 2 பேரை ஈஸ்வரன் தனியாக அழைத்துச்சென்று அவா்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து சிறுவா்கள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனா். இதைத் தொடா்ந்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில், உடுமலை மகளிா் போலீஸாா் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் தீா்ப்பு வழங்கினாா்.

இதில், சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.