விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:39 pm

Din

வெள்ளக்கோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளா் ஈ.பரிமளா சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளா், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், சட்டத்துக்குப் புறம்பாக தத்து கொடுத்தல், பெண் சிசுக் கொலை, தீண்டாமை ஒழிப்பு குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், குழந்தை பிறப்பு பதிவு, ஆதாா் பதிவு, பள்ளியில் சோ்த்தல், தடுப்பூசி செலுத்துதல், பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயா்த்துதல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.