அக்.28 இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.


எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலகா் க.காா்த்தியேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் எரிவாயு பயன்பாடு தொடா்பான புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...