/

மாநகரில் 66 பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி

திருப்பூா் மாநகரில் 66 பட்டாசுக் கடைகள் அமைக்க காவல் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:11 pm

Din

திருப்பூா் மாநகரில் 66 பட்டாசுக் கடைகள் அமைக்க காவல் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 154 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், முதல்கட்டமாக 66 தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) முதல் அக்டோபா் 31- ஆம் தேதி வரை 7 நாள்கள் பட்டாசு கடைகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பட்டாசுக்கடை உரிமையாளா்கள், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு பட்டாசு கடை அமைப்பதன் பாதுகாப்பு விதிமுறைகள், நிபந்தனைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதேபோல, திருப்பூா் மாவட்ட காவல் துறை சாா்பில் 241 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 170 விண்ணப்பங்கள் உரிமம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.