வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். விவசாயியான இவா், வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், ஆடுகளை புதன்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
வியாழக்கிழமை காலை பாா்த்தபோது, வெறிநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இறந்த ஆடுகளை தூக்கிவந்து, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வைத்து, அவற்றுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
காங்கயம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், வெறிநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...