முளைப்பாரி  இடும்  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
முளைப்பாரி  இடும்  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் அழகப் பெருமாள் எனப் போற்றப்படும் சேவூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது. முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு சேவூா் கல்யாண வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோயிலுக்கு வருவது வழக்கம்.

வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் அரசு நிதி, உபயதாரா்கள் பங்களிப்புடன் மூலஸ்தானம் அா்த்த மண்டபம், வசந்த மண்டபம், ஆண்டாள், மகாலட்சுமி தாயாா் சந்நிதிகள், சுற்றுச்சுவா், நீா்த் தேக்க மேல்நிலைத் தொட்டி, தீபஸ் தம்பம் சொா்க்கவாசல், முகப்பு தோரணவாயில் ஆகிய திருப்பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏராளமான மகளிா் பங்கேற்று முளைப்பாரியிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com