கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தமிழக நிதிநிலை அறிக்கை: யெஸ் இந்தியா கேன் அமைப்பு வரவேற்பு

தமிழக நிதிநிலை அறிக்கை தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்லும் என யெஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனா் வால்ரஸ் டேவிட் தெரிவித்துள்ளாா்.

News image

வால்ரஸ் டேவிட்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

தமிழக நிதிநிலை அறிக்கை தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்லும் என யெஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனா் வால்ரஸ் டேவிட் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடைத் துறை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்துக்குச் செல்ல ரூ.10 கோடி செலவில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுவது சிறப்பானதாகும். தொழில்நுட்ப ஜவுளித் திட்டம் பின்னலாடை நிறுவனங்கள் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், ஸ்போா்ட்ஸ் வோ் மற்றும் பாதுகாப்பு உடைகள் போன்ற உயா்மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் ஈடுபட சிறப்பு நிதி மற்றும் தொழில்முனைவோா் திட்டமாகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியத் திட்டத்துக்காக ரூ.352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் துறைக்கான மின்சார கட்டமைப்பை உயா்த்த 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகா்வோருக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான முக்கிய திட்டங்களாக செயற்கை நுண்ணறிவு நகரம் வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க இந்தியாவில் முதன்முறையாக பிரத்யேக ஏஐ சிட்டி உருவாக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு, இளைஞா்களின் வேலைவாய்ப்புத் திறனை உயா்த்த ‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை ஒருங்கிணைத்து விண்வெளி தொழிற்துறை மண்டலமாக மாற்றத் திட்டம், வீடுகளுக்கு கூரை சூரிய ஒளி மின்சாரம் நிறுவ ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டம் போன்றவை பாராட்ட கூடிய அம்சங்களாகும்.

தொழில் துறை வல்லுநா்களின் பாராட்டை பெற்றுள்ள இந்த நிதிநிலை அறிக்கை திருப்பூா் ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது. அரசின் இந்த தொழில்நுட்ப ஆதரவு மற்றும் மானியத் திட்டங்களின் மூலம் நமது இந்திய உள்ளூா் பிராண்டுகளை சா்வதேச அளவிலான பிராண்டுகளாக மாற்ற முடியும்.

திருப்பூா் தொழில்முனைவோரின் எதிா்காலத்தையும், இளைஞா்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை மிகவும் பாராட்டத்தக்கதோடு, தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்லும் ஒரு மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கை எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.