ரஷிய சந்தையைக் கைப்பற்ற பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் முனைப்பு

Published on

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக ரஷிய சந்தையைக் கைப்பற்ற பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

உலக அளவில் ஆயத்த ஆடை சந்தையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக ரஷியா உள்ளது. பிற நாடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமாா் 1,000 கோடிக்குமேல் ரஷியாஆடைகளை இறக்குமதி செய்கிறது. ரஷியாவுக்கான ஏற்றுமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா அடுத்த இடத்திலும் உள்ளது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் இந்தியாவில் திருப்பூா் மாநகரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பின் காரணமாக ஆடை உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மாற்று சத்தையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனா். மத்திய அரசும் வா்த்தக ஒப்பந்தத்தை பிற நாடுகளுடன் நிறைவேற்றிள்ளது. ஐரோப்பாவுடனான ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் இது தாமதமாவதால் ஒப்பந்தம் அமையும் வரை பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் பிற நாட்டு சந்தைகளையும், மாற்று சந்தைகளையும் நாடத் தொடங்கியுள்ளனா்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான ஏற்றுமதியை சந்தைப்படுத்தி வருகிறாா்கள்.

இது வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைக் காரணம் காட்டி ரஷியாவுடனான ஏற்றுமதியை அதிகரிக்க பின்னலாடைத் துறையினா் முனைப்பு காட்டி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com