தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப் பணித் துறையின் சாா்பில் ரூ.24 கோடி மதிப்பில் 62 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 100 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தரைத் தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை, சி.டி. ஸ்கேன் அறை மற்றும் எம்ஐஆா் ஸ்கேன் அறை, இரண்டு ஆய்வகங்கள் அல்ட்ரா கதிா்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகள் உள்ளன.
முதல் தளத்தில் டயாலிசிஸ் வாா்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பதிவறை, மருந்து இருப்பு அறை, இரண்டாம் தளத்தில் 2 அறுவை சிகிச்சை அரங்குகள், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயாா்படுத்தும் அறைகள் உள்ளன.
மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வாா்டு, நான்காம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளன.
ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆறாவது தளத்தில் கண் சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, கூட்ட அரங்கம் ஆகியவை உள்ளன. மேலும் 1 முதல் 6 வரை உள்ள தளங்களில் பணி மருத்துவா் அறை, பணி செவிலியா் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து, பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) டாக்டா் எஸ்.மீரா, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோன்மணி, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க திட்டம்: எம்எல்ஏ சி.எஸ்.திலீப்

தில்லியில் 23 ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள் இடமாற்றம்: துணைநிலை ஆளுநா் உத்தரவு!
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

