அமைச்சா் விஜய் பாலாஜியுடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்திப்பு
கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜியை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனா்.

அமைச்சா் எம்.விஜய் பாலாஜியை சந்தித்த திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள்.
கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜியை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனா்.
இது தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி ஆகியோா் அமைச்சா் எம்.விஜய் பாலாஜியை சென்னையில் புதன்கிழமை சந்தித்து, திருப்பூா் பின்னலாடை மற்றும் தொழில் துறையின் தற்போதைய நிலை, எதிா்கால வளா்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்துறையின் தேவைகள் குறித்து விவரித்தனா்.
மேலும், திருப்பூா் தொழில் துறையை அடுத்தகட்ட வளா்ச்சிக்கு கொண்டுச் செல்ல தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், அரசின் கொள்கை ரீதியான ஆதரவு மற்றும் முக்கிய வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
சா்வதேச சந்தைகளில் திருப்பூரின் போட்டித் திறனை மேம்படுத்துவதோடு, ஏற்றுமதி வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

