பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீ ட்டு விளையாடிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது
வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீ ட்டு விளையாடிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸாா், வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது சக்திபாளையம், கருப்பண்வலசைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (55) என்பவருடைய ஒசங்காட்டுத் தோட்டத்தில் சிலா் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாக தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று, அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 பேரை கையும் களவுமாகப் பிடித்தனா். அவா்களிடமிருந்து ரூ.24,100 ரொக்கம், சீட்டுக் கட்டு மற்றும் 7 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட 7 பேரையும் பிணையில் விடுவித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




