இளம்வயது திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

Published on

ஏரியூா் அருகே இளம் வயது திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 17 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி சிகிச்சைக்கு வந்துள்ளாா். அப்போது பணியில் இருந்த மருத்துவா், இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

இதையறிந்த கா்ப்பிணி சிகிச்சை பெறாமல் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இளம் வயது திருமணம் செய்தது ஏரியூா் அருகே சிடுவம்பட்டி பகுதியைச் சோ்ந்த சேதுபதி (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளம் வயது திருமணம் செய்து சேதுபதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com