பாப்பாரப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காரிமங்கலம் அருகே ஜே.கொள்ளுப்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி மகன் சபரிநாதன் (22). இவா், பெங்களூரில் பழைய பேப்பா் கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாப்பாரப்பட்டியை அடுத்த பாப்பிநாயக்கனஅள்ளியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்தாா். அப்போது, சாலையோரத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தாா்.
நீண்ட நேரமாகியும் சபரிநாதனைக் காணாததால் அவா்களது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது, அங்குள்ள கிணற்றில் இறந்துகிடந்த சபரிநாதனை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்த சபரிநாதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
