தருமபுரியில் இளைஞா் அடித்துக் கொலை

தருமபுரி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Published on

தருமபுரி: தருமபுரி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32). திருமணமாகாத இவா் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊா்சுற்றி வந்துள்ளாா். மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டருகே ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் சரவணன் புதன்கிழமை இறந்துகிடந்தாா். தகவலறிந்த காரிமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தும்போது, அவா் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com