கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இரண்டு மாதங்களில் ஒகேனக்கல் குடிநீர்: அமைச்சர்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரண்டு மாதங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:28 pm

தினமணி

 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரண்டு மாதங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

அரூரை அடுத்துள்ள சந்தப்பட்டியில் புதிய கால்நடை மருந்தக தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இரா.பாண்டியன் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தைத் தொடக்கிவைப்பார்.

மொரப்பூர் ஒன்றியம், சந்தப்பட்டியில் ரூ.7.59 லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மருந்தகத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ.27.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அரூர் கிளையில், நவீனமயமாக்கப்பட்ட கட்டடம், கணினி சேவையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

விழாவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த 233 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், கோழி வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.80,11,600 மதிப்பிலான நிதி உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர்.அன்பழகன், பி.டில்லிபாபு எம்எல்ஏ, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அ.அர்த்தநாரி, உதவி மருத்துவர்கள் பி.வெற்றிவேல், பி.கனகசபை, சந்தப்பட்டி ஊராட்சித் தலைவர் எஸ்.கே.சி.சமதர்மம், அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.ஆர்.முருகன், பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி முருகேசன், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சி.தென்னரசு, லலிதா குப்புசாமி, கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் ஆர்.நடேசன், கள மேலாளர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.