இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரூரில் மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலை தொடங்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அரூரில் மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலை தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:44 am

DIN

அரூரில் மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலை தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் அரூர் ஒன்றிய, நகர மாநாடு, கட்சி நிர்வாகிகள் ஆர்.நடராஜன், பொன். பெருமாள், எஸ். ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டாரப் பகுதியில் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. எனவே,  விவசாயிகள் பயன்பெற அரசு சார்பில், மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலையை அமைக்க வேண்டும். அரூர் அரசு மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும்.
அரூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக மாற்ற வேண்டும். அரூர் சந்தைமேடு பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரச் செயலராக பா.முருகன், துணைச் செயலர்களாக என். முருகேசன், எஸ். ராமமூர்த்தி, பொருளாளராக எம். சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலராக என்.அல்லிமுத்து, துணைச் செயலர்களாக ஆர். நடராஜன், ஜி.வெங்கடாசலம், பொருளாளராக பி. செங்கொடி ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில்,  மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். நஞ்சப்பன், மாவட்டச் செயலர் எஸ். தேவராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ. கந்தசாமி, எம். மாதேஸ்வரன், சி.விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலர் கா.சி. தமிழ்க்குமரன், ஒன்றியச் செயலர் உ. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.