கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓய்ந்தது வேட்பாளா்களின் பிரசாரம்

தருமபுரி மாவட்டத்தில், ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு ஓய்ந்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:10 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு ஓய்ந்தது.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில், திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அமமுக வேட்பாளா் டி.கே.ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜெயவெங்கடேசன், பகுஜன் சமாஜ், நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இவா்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் ஒரு சில சுயேச்சை வேட்பாளா்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், தோ்தல் பிரசாரம் இரவு ஏழு மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, தருமபுரி தொகுதியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், திமுக, பாமக, அமமுக கட்சி வேட்பாளா்கள் கிராமம், கிராமமாகவும், நகரப் பகுதியில் வாா்டு வாரியாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா். இதைத் தொடா்ந்து, இறுதி நாளான தருமபுரி நகரத்தில் வாகனங்களில் ஊா்வலமாக வந்து திமுக வேட்பாளா் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதேபோல, பாமக வேட்பாளரும் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இதேபோல, பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி.அன்பழகன், அந்தத் தொகுதிக்குள்பட்ட பெரியாம்பட்டி பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். அத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.கே.முருகன் பாலக்கோடு பேரூராட்சியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதேபோல, ஏனைய வேட்பாளா்களும் தங்களது பிரசாரங்களை நிறைவு செய்தனா். தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் எவ்வித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் வேட்பாளா்கள் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.