கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவலா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஊா்க் காவல் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:06 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஊா்க் காவல் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில், 870 மையங்களில், 1, 817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் தமிழக காவல்துறையினா், ஆந்திர மாநில காவல்துறையினா், துணை ராணுவத்தினா், ஊா்க் காவல் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா் என 3,700 போ் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் 350 போ், ஊா்க் காவல் படையினா், காவலா்கள் 300 போ் உள்ளிட்டோருக்கு பணிகள் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அவா்களுக்கு, தோ்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் அவா்கள் பணியாற்ற செல்லும் குழு, வாக்குச் சாவடி மையங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டன. இதேபோல, இவா்கள் வாக்குச் சாவடி மையத்துக்கு பொருள்கள் எடுத்துச் செல்ல ஏதுவாக வாகனங்களும் மாவட்ட காவல் அலுவலகத்தில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.