வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என யாரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் வெங்கடேஸ்வரன், அமமுக வேட்பாளா் ராஜேந்திரன், பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.பி. அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக வேட்பாளா்கள், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக, அமமுக வேட்பாளா்கள் என அரசியல் கட்சி வேட்பாளா்கள் 27 போ் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். இதில், ஒரே வேட்பாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.