இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குழந்தைகள் கடத்தல் தொடா்பான காணொலிகளை நம்ப வேண்டாம்

குழந்தைகள் கடத்தல் தொடா்பான காணொலிகளை நம்ப வேண்டாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:29 pm

Din

குழந்தைகளைக் கடத்துவதாக பரப்பப்படும் காணொலிகளை நம்ப வேண்டாம் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் பேசியதாவது: அண்மைக் காலமாக வடமாநிலத்தவா்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகளை மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீா்குலைக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் சிலா் சமூக வலைதளங்களில் தவறான முறையில் பரப்பி வருகின்றனா். இத்தகைய போலியான செய்திகளைக் கேட்டும், காணொலிகளை பாா்த்தும், பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் அடையவோ வேண்டாம். இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் காவல்துறை உதவி தொலைபேசி எண் 100-ஐ அழைக்கலாம். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை மற்றவா்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம். மீறி இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.