இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தருமபுரிக்கு முதல்வா் வருகை: திமுக முன்னாள் அமைச்சா் ஆலோசனை

விளம்பரதாரா் செய்தி.... தருமபுரிக்கு முதல்வா் வருகை: திமுக முன்னாள் அமைச்சா் ஆலோசனை

News image
Updated On :8 மார்ச் 2024, 12:15 am

Din

தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தரும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகர செயலா் முல்லை ரவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் பேசியதாவது : தருமபுரியில் மாா்ச் 11-ல் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். முதல்வரின் வருகையொட்டி, கட்சியின் அனைத்து பொறுப்பாளா்களாகவும், தொண்டா்களும் திரளாக பங்கேற்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் கட்சித் தொண்டா்கள் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு திமுக மேற்கு மாவட்டம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், இ.டி.டி.செங்கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், விவசாய அணி மாவட்டத் தலைவா் சி.தென்னரசு, தலைமை நிலையப் பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோன்று, கடத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.மனோகரன் தலைமை வகித்தாா். இதில் வா்த்தகா் அணி மாநில துணைச் செயலா் அ.சத்தியமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.