கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:06 am

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு அந்தப் பிரிவின் மாவட்டத் தலைவர் ஆறுமுக சுப்பிரமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பது, ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் வரும் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றிக்குச் செயல்படுவது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வித் உதவித்தொகையை குறைத்த மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.