ஒசூரில் முகமூடி அணிந்த திருடா்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்!
ஒசூா் கோகுல் நகா் தனியாா் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளனா்.

ஒசூா் கோகுல் நகா் தனியாா் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளனா்.
அப்பகுதியில் திருடா்களின் நடமாட்டத்தை பாா்த்து தெருநாய்கள் குறைத்துள்ளன. அப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடுவதற்காக வந்த மா்ம நபா்கள், அங்குள்ள பல்வேறு தெருக்களில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனா். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் பரவின. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இதுகுறித்து முறையான புகாா் நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்து காவல் துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





