
ராசிபுரம் அருகே புதுமண தம்பதியினர் குடும்பத்துடன் சென்ற காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் மணமகனின் தாயார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் 2-ஆவது அக்ரஹாரம் காசி முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சந்திரசேகரனுக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது.
மாலையில் புதுமண தம்பதியுடன், சந்திரசேகரனின் தாயார் சரசு, தந்தை மணி ஆகியோர் உள்பட 5 பேர் சேந்தமங்கலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிட்டு சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சந்திரசேகரனின் தந்தை மணி ஓட்டினார்.
ராசிபுரம் அருகே நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆயாகோவில் பிரிவு அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழனிவேல் என்பவர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, நிலை தடுமாறிய கார், சாலையோரம் உள்ள பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த சந்திரசேகரன் தாயார் சரசு (55) நிகழ்விடத்திலே பலியானார். மேலும் புதுமண தம்பதியினர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த பழனிவேலும் விபத்தில் படுகாயமடைந்தார். 5 பேரும் உடனடியாக அப்பகுதி மக்கள் மூலம் ஆம்புலன்ஸில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராசிபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




