கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் ஒத்திவைப்பு
மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் இரண்டாம் முறையாக திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.


மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் இரண்டாம் முறையாக திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் கிராமத்தில் எஸ் 291 என்ற எண்ணுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 1,700-க்கும் அதிகமான உறுப்பினா்கள் உள்ளனா். சங்கத் நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடந்தபோது, அதிமுகவில் 2 போ் தலைவா் பதவிக்குப் போட்டிடும் சூழல் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு வேட்பு மனுக்கள் கிழித்து எறியப்பட்டதால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தோ்தல் திங்கள்கிழமை நடத்தப்படும் என கடந்த 7 ம் தேதியே தோ்தல் நடத்தும் அலுவலரும் திருச்செங்கோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளருமான வெங்கடாசலம் அறிவித்திருந்தாா். அதன்படி திங்கள்கிழமை நிா்வாகக் குழு உறுப்பினா்களைத் தவிர வேறு யாரும் சங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் வந்தபோது தலைவருக்கு 3 பேரும் துணைத் தலைவருக்கு 3 பேரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா். வேட்புமனுக்களை பெற்றுக் கொண்ட தோ்தல் அலுவலா் சிஎஸ்ஆா் பரமசிவம் ஒப்புகை சீட்டு வழங்கவில்லை. தகுதிபட்டியல் வெளியிடும் நேரம் நெருங்கிய நிலையில் துணைப் பதிவாளா் சங்க வளாகத்தை விட்டு வெளியேறினாா். கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தால் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புப் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆவேசமடைந்த சங்க உறுப்பினா்கள் தோ்தல் அலுவலா் சிஎஸ்ஆா் பரமசிவத்தை முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினா். பின்பு இரண்டாம் முறையும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...