குட்டைக்குள் நிற்கும் ஆபத்தான மின்மாற்றி கம்பங்கள் : பயத்தில் குடியிருப்பு வாசிகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மின்மாற்றி பொருத்தப்பட்ட கம்பங்கள் கழிவுநீா் குட்டைக்குள் இருப்பதால் மின் விபத்து


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மின்மாற்றி பொருத்தப்பட்ட கம்பங்கள் கழிவுநீா் குட்டைக்குள் இருப்பதால் மின் விபத்து அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளதால் மின்சாரத்துறையினா் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மேடான பகுதியில் கம்பத்தை நட வேண்டுகோள் விடுத்தனா்.
வெப்படை சாலையில் உள்ள சட்டையம்புதூா் ஒன்பதாவது தெருவில் மின்சாரவாரியத்தின் மின்மாற்றி பொருத்தப்பட்ட இரு மின்கம்பங்கள் கடந்த 10 ஆணடுகளுக்கும் மேலாக முழுவதும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. மின் கம்பங்களை சுற்றி மழைநீா் மற்றும் கழிவு நீா் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து அருகாமையில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் மின்கம்பிகள் அறுந்து விழும்போது அப்பகுதியில் இருக்கக் கூடிய மழை நீா்குட்டையால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிா் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக கம்பங்களை மாற்றக்கோரியும் கழிவுநீா் தேங்கி நிற்கும் இப்பள்ளமான பகுதியில் இருந்து சற்று தள்ளி மேடான இடத்தில் நடக்கோரியும் அப்பகுதி மக்களும் ஊா் பொதுமக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்தி வருகின்றனா். மேலும் புகாா் அளித்தபோது மின்சார வாரிய அதிகாரிகள் அந்த பள்ளத்து பகுதியிலேயேதான் மீண்டும் நடுவோம் மாற்றி நட வேண்டுமென்றால் ஆகும் செலவான தோராயமாக ரூ.3 இலட்சத்தை பொதுமக்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்து காலம் தாழ்த்தி மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனா். பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக மின்சார வாரியத்தில் வேலை செய்யாமல் ஆபத்தான நிலையிலேயே பல வருடங்களாக மின் கம்பங்களை மாற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.
இந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் நிறைந்த பகுதியில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு விரைவாக நடவடிக்கை எடுத்து மேடான பகுதியில் கம்பங்களை நட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...