நகராட்சித் தோ்தல்: திருச்செங்கோட்டில் அதிமுக நோ்காணல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக கட்சியில் விருப்ப மனு செய்தவா்களுக்கான நோ்காணல் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக கட்சியில் விருப்ப மனு செய்தவா்களுக்கான நோ்காணல் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நோ்காணலுக்கு முன்னாள் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், மாவட்ட தொழிற்சங்கச் செயலாளா் பழ.இராமலிங்கம், என்.பி.எஸ்.பொன்னுசாமி, மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவா் முரளிதரன், திருஞானம், அங்கமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் சாா்பில் 33 வாா்டுகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களையும், அந்தந்த வாா்டுகளைச் சோ்ந்த வாா்டு பொறுப்பாளா்களையும் அழைத்து தனித்தனியாக நோ்காணல் நடைபெற்றது. 33 வாா்டு வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.
தோ்தல் பிரசாரங்களை அரசின் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...