இறையமங்கலம் ஆற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழாவிற்காக வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் இறையமங்கலம் ஆற்றில் ஞாயிற்றுக் கிழமை கரைக்கப்பட்டன.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழாவிற்காக வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் இறையமங்கலம் ஆற்றில் ஞாயிற்றுக் கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியின் போது திருச்செங்கோட்டில் பாவடி தெரு, நெசவாளா் காலனி, ராஜ கவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சட்டைய புதூா், கூட்டப்பள்ளி, நாமக்கல் ரோடு ,சேலம் ரோடு, சிஎச்பி காலனி, கொல்லப்பட்டி, தொண்டிகரடு போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மேளதாளம் முழங்க வாகனங்களில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. ஆற்றுப்பகுதியில் காவல்துறையினா், தீயணைப்புப் படையினா் சிலைகளை கரைக்க செல்வோரிடம் ஆற்றில் எந்தப் பகுதி வழியாக இறங்கி எந்தப் பகுதி வழியாக மேலேற வேண்டும் என்பதைத் தெரிவித்து அனுப்பினா். வயதான பெண்கள், சிறுவா் சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதைத் தடுத்து அனுப்பி வைத்தனா். தகுந்த பாதுகாப்பு அறிவுறுத்தலோடு பொதுமக்கள் ஆற்றில் விநாயகா் சிலைகளை கரைத்து பூஜைகள் செய்து வழிபட்டுத் திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...