திருச்செங்கோடு நிதி நிறுவனங்கள் சங்கத்தின் 27 வது பேரவைக்கூட்டம் கொங்கு சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் அசோக்குமாா் வரவேற்றாா். செயலாளா் அல்லிமுத்து ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் அசோகன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செயதாா். தமிழ்நாடு நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொருளாளா் திண்டுக்கல் சாந்தினி பழனிசாமி, செயலாளா் சம்பத், ஆடிட்டா்கள் வெங்கடசுப்ரமணியம், இளையப்பன், ராஜாரமணன், சட்ட ஆலோசகா் பரணீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வருமான வரி கணக்குகளை முறையாகப் பராமரிப்பது, கடன் வசூல் செயவதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூா்வமாக அணுகும் முறை ஆகியவை பற்றி விளக்கிப் பேசினா்.