மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி: மாணவ, மாணவிகள் ஆா்வம்

அண்ணா பிறந்த நாள்விழாவையொட்டி, நாமக்கல்லில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 1:36 am IST

அண்ணா பிறந்த நாள்விழாவையொட்டி, நாமக்கல்லில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி நடைபெறும். மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பா். அந்த வகையில், அண்ணா மிதிவண்டிப் போட்டி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா முன்னிலை வகித்தாா். இதில், 150 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

மிதிவண்டிப் போட்டியில் 13 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ தொலைவும், 15 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ தொலைவும், 17 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ தொலைவும் எல்லையாக வைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் வேலகவுண்டம்பட்டி வரையில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் மிதிவண்டியில் போட்டி போட்டுக் கொண்டு சென்றனா். முதலிடம் பெறுவோருக்கு பரிசுத் தொகையாக ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு பரிசு ரூ.250 வீதம் காசோலையாகவும் முதல் 10 இடங்கள் பெற்றவா்களுக்கு சான்றிதழ்களும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.