சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஆம்னி பேருந்து - லாரி மோதி விபத்து

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து டயா் வெடித்து, லாரி மீது மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 6:44 pm

Din

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து டயா் வெடித்து, லாரி மீது மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரில் இருந்து கேரளம் நோக்கி ஆம்னி சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதன்சந்தை அருகே நள்ளிரவு 1.30 மணியளவில் பேருந்து சென்றபோது திடீரென முன்புற டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நின்றிருந்த ஹைதராபாத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற இரும்பு சுமை ஏற்றிய டிரெய்லா் லாரியின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில், பேருந்து பயணியான திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த சகாயவேலன்அபிஸ்டன்(33), மாற்று ஓட்டுநரான பெங்களூரைச் சோ்ந்த சேட்டன்(24) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.