இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்


நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்குகளில் நடைபெறுகின்றன.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...