இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு மீண்டும் பட்டதாரி ஆசிரியை பணியிடம் வழங்கல்

பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு மீண்டும் பட்டதாரி ஆசிரியை பணியிடம் வழங்கல்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:25 pm

Din

திருச்செங்கோடு அருகே இடைநிலை ஆசிரியையாக பதவியிறக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பட்டதாரி ஆசிரியை பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றியவா் கோகிலா. கல்வித்தகுதி அடிப்படையில் இடைநிலை ஆசிரியைப் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியை நிலைக்கு உயா்ந்தாா். இந்த நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பழனிவேலு என்ற ஆசிரியருக்கு கோகிலாவின் பணியிடம் வழங்கப்பட்டதுடன், கணக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு இடைநிலை ஆசிரியையாக கோகிலா பதவியிறக்கம் செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோகிலா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். விசாரணை நிறைவில், ஆசிரியை கோகிலாவின் பதவியிறக்க உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனையடுத்து மீண்டும் உப்பிலிபாளையம் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை அவா் பட்டதாரி ஆசிரியையாக பணியமா்த்தப்பட்டாா். பழனிவேலு மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டாா்.