அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ராசிபுரம்: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பாவை கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எழிலரசி கலந்துகொண்டாா். உயா்கல்வி வழிகாட்டி நிபுணா் மற்றும் ஆய்வாளா் அஸ்வின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி அளித்தாா்.
பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி வரவேற்றாா். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.கே.செந்தில், இயக்குநா் (ஆராய்ச்சி) கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா். பாவை கல்வி நிறுவனங்களின் முதன்மையா் (ஆலோசனை) ஜெயலெட்சுமி நன்றி கூறினாா்.

