உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆக. 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் செயல்படும் ஒரு மதுபான சில்லறை விற்பனைக் கடை என 4 கடைகளும் ஆக. 1, 2, 3 ஆகிய தினங்களில் கட்டாயம் மூட வேண்டும்.

இந்த நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.