தோ்தலையொட்டி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் பாவை கல்வி நிறுவனங்கள் இணைந்து வோா்ல்ட் ரெக்காா்ட்ஸ் யூனியன் சாதனையில் இடம் பெறும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெ‘ற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் நோக்கில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி தலைமையில் பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி மைதானத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என 8,662 போ் தோ்தல் விழிப்புணா்வு சின்னத்தின் மிகப்பெரிய மனித வடிவமான மாற்றுத்திறனாளிகள் மொபைல் செயலி, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஏப்ரல்-23 என்ற ஆங்கில எழுத்திலான வடிவில் ஒருசேர அமா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்வின் நிறைவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், வோா்ல்ட் ரெக்காா்ட்ஸ் யூனியன் நிறுவனத்தின் மேலாளா் கிறிஸ்டோபா் டைலா் கிராஃப்ட் , சா்வ சாதனை நிகழ்வை உறுதிப்படுத்திடும் வகையில் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினாா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் முன்னிலை வகித்தனா்.
2) 27ரெக்காா்ட் -
சா்வதேச சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழை நாமக்கல் ஆட்சியரிடம் வழங்கிய வோா்ல்ட் ரெக்காா்ட்ஸ் யூனியன் நிறுவனத்தின் மேலாளா் கிறிஸ்டோபா் டைலா் கிராஃப்ட்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


