மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

காலாவதி தேதி குறிப்பிடாத 27 லிட்டா் எண்ணெய் புட்டிகள் பறிமுதல்

பரமத்தி வேலூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் 27 லிட்டா் எண்ணெய் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

பறிமுதல்

Updated On :

பரமத்தி வேலூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் 27 லிட்டா் எண்ணெய் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் தங்க விக்னேஷ் உத்தரவின்படி பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி தலைமையிலான அலுவலா்கள் பரமத்தி வேலூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 லிட்டா் தேங்காய் எண்ணெய், 11 லிட்டா் நல்லெண்ணெய், 7 லிட்டா் கடலை எண்ணெய் என மொத்தம் 27 லிட்டா் (ஒரு லிட்டா் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்டது) எண்ணெய் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.