பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பேளூர் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

வாழப்பாடி  அருகே பேளூர் ராமநாதபுரம் சக்தி மாரியம்மன், மதுரை வீரன், காத்தவராயன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

வாழப்பாடி  அருகே பேளூர் ராமநாதபுரம் சக்தி மாரியம்மன், மதுரை வீரன், காத்தவராயன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. 
பேளூர் பேரூராட்சிக்குள்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில், ராஜகோபுரம், குறிஞ்சி கோபுரம், மகாமண்டபம் சகிதமாக சக்தி மாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.  அதிகாலை 5 மணியளவில் ஐந்தாம் கால யாக பூஜை, தீபாராதனை,  காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியர்கள் முன்னிலையில், கோபுரக் கலசம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்திலுள்ள மதுரை வீரன், காத்தவராயன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா, சிறப்பு பூஜை  நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.